Vijay files petition at dgps office: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vijay files petition at dgps office: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: October 8, 2025 at 4:02 pm
சென்னை, அக்.8, 2025: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் பேட்டி
இது தொடர்பாக பேட்டியளித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அறிவழகன் புதன்கிழமை (அக்.8, 2025) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற செல்ல அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் இன்று தமிழக காவல்துறை தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார்.
பதில் இல்லை
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.ஆனால் அதற்கு த.வெ.க வழக்கறிஞர் பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.
கரூர் துயரம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செப்.27ஆம் தேதி நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர்.இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற விஜய் இதுவரை கரூர் செல்லவில்லை. இந்த நிலையில், அவர் கரூர் செல்ல த.வெ.க சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது” குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகர் விஜய்க்கு வெளியே வர பயம்.. துரைமுருகன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com