குடும்பத்துடன் தாய்லாந்து புறப்பட்ட நபர் சென்னை விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
குடும்பத்துடன் தாய்லாந்து புறப்பட்ட நபர் சென்னை விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
Published on: December 13, 2024 at 9:19 pm
Chennai airport | சென்னை விமான நிலையத்தில் சோதனைச் சாவடியில் நேற்று இரவு வரிசையில் காத்திருந்த 52 வயது பயணி ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசிக்கும் அற்புத சகாயராஜ் (52) என்பவர் விடுமுறையை முன்னிட்டு தாய்லாந்துக்கு செல்வதற்காக குடும்பத்துடன் விமான நிலையம் வந்துள்ளார். சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு விமானம் புறப்பட இருந்தது.
இந்நிலையில், சோதனைச் சாவடியில் வரிசையில் காத்திருந்தபோது, சகாயராஜ் திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
சகாயராஜ் இறந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்களின் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில், அவசரநிலை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமான ஏர் ஏசியா விமானம், இறுதியில் 12.30 மணிக்கு பாங்காக் புறப்பட்டது.
சகாயராஜின் உடலை கைப்பற்றிய சென்னை போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com