Car accident in Cuddalore: தமிழ்நாட்டில் பைக் மீது கார் மோதியதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
Car accident in Cuddalore: தமிழ்நாட்டில் பைக் மீது கார் மோதியதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
Published on: April 22, 2025 at 5:00 pm
கடலூர் , ஏப். 22 2025: கடலூர் மாவட்டம் மு.புதூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் பி.நேரு (55) மற்றும் நாகிநாதம் பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் பி.சரண்யா (30) மற்றும் பி.கல்பனா (30) ஆகியோர் நேற்று (ஏப்ரல் 21, 2025 ) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில், வில்லுப்புரம்–நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ராமாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், சரண்யா மற்றும் கல்பனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நேரு, மீட்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் அவரும் இறந்ததாக அறிவித்தனர். நேருவின் மனைவி என்.சுதா, மு.புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார்.
விபத்து தொடர்பாக திருப்பதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வந்தவர்கள், வாகனத்தை விபத்து நடந்த இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க திருநெல்வேலி டூ டெல்லி நிஜாமுதீன் ஸ்பெஷல் ட்ரெயின்: நேரம், தேதி செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com