தி.மு.க நிகழ்ச்சியில் பிரியாணி; 142 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Madurai | DMK | மதுரை தி.மு.க நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்ட நபர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தற்போது அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Published on: September 13, 2024 at 4:28 pm

Updated on: September 13, 2024 at 9:15 pm

Madurai | DMK | மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா வில்லூரில் திமுக சார்பில் நேற்று பொதுமக்கள் கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சிக்கன் பிரியாணி பார்சல்கள் வழங்கப்பட்டன. பிரியாணியை, பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று, தங்களின் பிள்ளைகளுக்கும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று இரவு திடீரென வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

இதில் மூன்று வயது முதல் 12 வயதுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி மற்றும் மயக்கம் அடைந்தனர். அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிடுவதற்கு காலதாமதம் ஆனதால் உணவு விஷமாக மாறி வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த திருமங்கலம் ஏ எஸ் பி அன்ஷல் நாகர் தலைமையிலான வில்லூர் போலீசார் மருத்துவமனை சென்று விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பெண் செய்தியாளருக்கு மிரட்டல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com