Vinesh Phogat | ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், “எனது குடும்பத்தை சந்திக்க வந்துள்ளேன்” எனக் கூறி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்.
Vinesh Phogat | ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், “எனது குடும்பத்தை சந்திக்க வந்துள்ளேன்” எனக் கூறி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்.
Published on: August 31, 2024 at 5:04 pm
Updated on: August 31, 2024 at 5:06 pm
Vinesh Phogat | ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், “எனது குடும்பத்தை சந்திக்க வந்துள்ளேன்” எனக் கூறி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்.
ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31, 2024) பஞ்சாபின் ஷம்பு கிராமத்தில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொண்டார். இங்கு விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) வாங்குவதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட நீ்ண்டகால பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய போகத், “எனது குடும்பத்திற்கு (விவசாயிகளுக்கு) ஆதரவளிக்க நான் வந்துள்ளேன். நாட்டின் விவசாயிகள் பிரச்சனையில் உள்ளனர், அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் அரசு உண்மையாக செயல்பட வேண்டும். இதற்குதான் அரசு முழு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : காயத்தோடு போராடுகிறேன், கடின உழைப்பு தேவை’: மேக்ஸ்வெல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com