Womens T20 World Cup | ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளன.
Womens T20 World Cup | ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளன.
Published on: September 25, 2024 at 11:31 pm
Womens T20 World Cup | ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளன. அதாவது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அக்டோபர் 3 முதல் 20 வரை நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான டிக்கெட்டுகள் இப்போது விற்பனையில் உள்ளன.
இந்த கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இரு நகரங்களில் நடைபெறும். இந்த உலக கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன.
இதில், ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடக்க போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் இலங்கையை எதிர்கொள்ளும் முன் வங்கதேசம் முதலில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டிகளை காண டிக்கெட் விலை 5 திர்ஹாமில் இருந்து தொடங்குகிறது. மேலும், ஆஃப்லைனில் வாங்க விரும்புவோருக்கு, துபாய் சர்வதேச ஸ்டேடியம் மற்றும் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகிய இரண்டிலும் கடைகள் உள்ளன.
மேலும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் ஐசிசி நுழைவு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி ஆண், பெண் வேறுபாடு இல்லை; ஒரே பரிசுத்தொகை தான்: ஐ.சி.சி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com