Virat Kohli: இந்திய கிரிக்கெட்டர் விராத் கோலி, மகேந்திர சிங் தோனியின் சொந்த நகருக்கு சென்றுள்ளார்.
Virat Kohli: இந்திய கிரிக்கெட்டர் விராத் கோலி, மகேந்திர சிங் தோனியின் சொந்த நகருக்கு சென்றுள்ளார்.

Published on: November 27, 2025 at 1:05 pm
Updated on: November 27, 2025 at 1:20 pm
ராஞ்சி, நவ.27, 2025: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க ஒருநாள் போட்டி நவம்பர் 30 ஆம் தேதி ஜே.எஸ்.சி.ஏ (JSCA) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி செவ்வாய்க்கிழமை (நவ.25) ராஞ்சிக்கு வந்தார்.
இந்நிலையில், பிர்சா முண்டா விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய ஜே.கே.சி.ஏ செயலாளருமான சவுரப் திவாரி கோலியை வரவேற்றார். தொடர்ந்து, அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவரை வெளியே அழைத்துச் சென்றார். முனையத்திற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களை பார்த்து விராத் கோலி உற்சாகத்துடன் கையசைத்தார்.
#WATCH | Jharkhand: Indian cricketer Virat Kohli arrives in Ranchi ahead of the first India vs South Africa ODI match to be played on November 30 at the JSCA International Cricket Stadium. pic.twitter.com/ozsfFV0URQ
— ANI (@ANI) November 26, 2025
(நன்றி ஏ.என்.ஐ)
தற்போது 50 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடும் கோலி, கடந்த மாதம் சிட்னியில் நடந்த போட்டியில் 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ராஞ்சி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் ஜென்மபூமி, இந்தியா மாத்ருபூமி.. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com