Sourav Ganguly: கொல்கத்தாவின் அர்ஜென்டினா ஃபேன் கிளப் தலைவருக்கு எதிராக ரூபாய் 50 கோடி நஷ்ட ஈடு கோரி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வழக்கு தொடர்ந்தார்.
Sourav Ganguly: கொல்கத்தாவின் அர்ஜென்டினா ஃபேன் கிளப் தலைவருக்கு எதிராக ரூபாய் 50 கோடி நஷ்ட ஈடு கோரி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வழக்கு தொடர்ந்தார்.

Published on: December 19, 2025 at 2:55 pm
கொல்கத்தா டிசம்பர் 19, 2025: பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸின் இந்திய வருகை, தொடர் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவின் அர்ஜென்டினா ஃபேன் கிளப் தலைவருக்கு எதிராக இந்திய மதிப்பில் ரூபாய் 50 கோடி நஷ்ட ஈடு கோரி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இதன் விவரம் வருமாறு:- எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல், சஹாவின் குற்றச்சாட்டுகள் கங்குலியின் நற்பெயருக்கு கெடுதல் விளைவித்ததாக வழக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. லால்பஜாரில் இந்தப் புகார் தொடரப்பட்டுள்ளது.
மெஸ்ஸி வருகையின் போது கங்குலி ஸ்டேடியத்தில் இருந்தார். ஆனாலும் அவர் வேறு பகுதியில் இருந்ததாகவும், பின்னர் கலவரம் ஏற்பட்ட போது வெளியேறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெஸ்சியின் வருகையில் சௌரவ் கங்குலி ஒரு பங்கு கொண்டிருந்தார் என்றும், இடைத்தரகராக இருந்ததாகவும் சஹா கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கங்குலியின் சட்டக் குழு சஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவரைத் திரும்பப் பெறவும், இழப்பீடு வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.
மெஸ்ஸி தனது இந்திய வருகையின்போது புதுடெல்லியில் உரையாற்றியபோது, “இந்தியாவில் இந்த அன்பு மற்றும் பாசத்திற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையில், அதைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது எங்களுக்கு மிகவும் அழகான அனுபவமாக இருந்தது” என்று கூறினார்.
மேலும், வேறொரு சந்தர்ப்பத்தில் நாங்கள் நிச்சயமாக திரும்பி வருவோம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி.. தங்கம் வென்ற மானு, ஷிம்ரன் ப்ரீத் கவுர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com