ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

RCB victory celebrations stampede: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: June 4, 2025 at 10:38 pm

Updated on: June 4, 2025 at 10:42 pm

பெங்களூரு, ஜூன் 4 2025: 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், ஆர்.சி.பி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை தனதாக்கியது. இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) மாலை வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 10 பேர் வரை உயிரிழந்தனர்.

இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக பெங்களூரு நேற்று (ஜூன் 3 2025) சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் வெற்றிக் கொண்டாட்டத்தை ரசிகர்களை நேரில் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதையடுத்து வாயில்களில் குழப்பமான சூழல் காணப்பட்டது.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி முதல்கட்டமாக 7 பேர் வரை உயிரிழந்தனர். இதற்கிடையில் தற்போது உயிரிழப்பு 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடுவதாக இருந்த கொண்டாட்டம் ஒரு சோகமாக மாறியது, ஆழ்ந்த துக்கத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அணி மீது அன்பு இருக்கட்டும், ஆனால் உயிரை விட மதிப்புமிக்கது எதுவும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க : ஆடம்பர பங்களாவில் வசிக்கும் வீரேந்திர சேவாக்.. நிகர சொத்து மதிப்பு என்ன?

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!
Israeli airstrike on Iran

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com