Ravindra Jadeja joins BJP | பிரபல கிரிக்கெட்டர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

September 1, 2025
Ravindra Jadeja joins BJP | பிரபல கிரிக்கெட்டர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
Published on: September 5, 2024 at 11:55 pm
Ravindra Jadeja joins BJP | இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் (BJP) சேர்ந்துள்ளதாக அவரது மனைவி ரிவாபா ஜடேஜா வியாழக்கிழமை ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் ஏற்கனவே பாஜக எம்எல்ஏவாக இருக்கும் ரிவாபா ஜடேஜா, தனது கணவரின் உறுப்பினர் அட்டையை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா ஜூன் 30 அன்று பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024 போட்டியை இந்தியா வென்ற ஒரு நாளுக்குப் பிறகு டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
சௌராஷ்டிராவில் டிசம்பர் 6, 1988 இல் பிறந்த ரவீந்திர ஜடேஜா, இந்தியாவுக்காக 72 டெஸ்ட் மற்றும் 197 ஒரு நாள் போட்டிகளில் முறையே 294 மற்றும் 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு ஜடேஜா முக்கியப் பங்காற்றினார், மேலும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : R (ராஜஸ்தான்), R (ராயல்ஸ்) R (ராகுல்): டிராவிட் புதிய அவதாரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com