பாகிஸ்தான் பெண்ணின் பௌலிங் வீடியோ வைரல்.. யார் இந்த ஐனா வாசிர்?

Pakistan: பாகிஸ்தான் பெண்ணின் பௌலிங் வீடியோ வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பதிவேற்றியவர் கடத்தப்பட்டார். ஏன்?

Published on: March 5, 2026 at 1:03 pm

இஸ்லாமாபாத், மார்ச் 5, 2026: வடக்கு வாசிரிஸ்தானைச் சேர்ந்த இளம் பாகிஸ்தான் பெண் ஐனா வாசிர், சில நாட்களுக்கு முன் வைரலான பௌலிங் வீடியோவால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சல்வார்-கமீஸ் அணிந்திருந்த அவர், உள்ளூர் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு சிறுவனுக்கு பந்து வீசும் போது, அவன் முற்றிலும் தடுமாறிக் கொண்டிருந்தான்.

ஐனா வாசிர் சமாளிக்க முடியாத அளவுக்கு திறமையாக பந்து வீசி இருந்தார். இந்நிலையில், பெண்கள் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தும் மகளிர் கிரிக்கெட் என்ற அமைப்பு, தனது பேஸ்புக் பக்கத்தில் ஐனா வாசிரை பாராட்டியது. இது குறித்து சமூக வலைதளத்தில், “வடக்கு வாசிரிஸ்தானைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் திறமைசாலி ஐனா வாசிர், தனது வேகப்பந்து வீச்சுத் திறமையால் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளார். தேவையான வழிகாட்டலும் வசதிகளும் வழங்கப்பட்டால், அவர் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலமாக மாறலாம்,” எனத் தெரிவித்து இருந்தனர்.

இதையும் படிங்க: அர்ஜுன் டெண்டுல்கர்- சானியா திருமணம்.. யுவராஜ் சிங் உட்பட குவிந்த பிரபலங்கள்!

இதற்கிடையில், அறிக்கைகளின்படி, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அணியான பெஷாவர் ஜல்மி, தனது மகளிர் லீக் முயற்சியின் ஒரு பகுதியாக ஐனா வாசிரை இணைத்துள்ளது. இந்நிலையில் ஐனா வாசிரின் பந்து வீச்சு நடை தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற டேல் ஸ்டெய்னின் பாணியை ஒத்ததாகக் பலரும் கூறியுள்ளனர்.

ஆனால், அந்த வீடியோவின் மகிழ்ச்சிக்குப் பிறகு துயரமும் வந்தது. அந்த வீடியோவை பதிவு செய்த நபர், சில நாட்களுக்குப் பிறகு கடத்தப்பட்டார். ஏன்? அந்த வீடியோ அவர்கள் பாரம்பரியத்திற்கும் மதத்திற்கும் முரணானதாக இருந்ததாகக் கருதி, சில மூத்தோர் தலையிட்ட பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. மேலும், அவர் தான் சந்தித்த துன்பங்களை, உடல் வதை உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:செஸ் தரவரிசை.. மீண்டும் முதல் 10 இடத்துக்குள் வந்தார் குகேஷ்!

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது எப்படி?
Ayatollah Ali Khamenei killing

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com