திருவனந்தபுரத்தில், “நம்ம ஊரு பையன்”.. தெறிக்க விடலாமா சஞ்சு சாம்ஸன்!

Sanju Samson: சஞ்சு சாம்சன் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் முதல் T20I போட்டியை ஆடத் தயாராகிறார்.

Published on: January 31, 2026 at 2:59 pm

திருவனந்தபுரம், ஜன.31, 2026: சஞ்சு சாம்சன் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் முதல் T20I போட்டியை ஆடத் தயாராகிறார். உள்ளூர் ரசிகர்கள் அவரிடம் ஒரு சிறப்பு இன்னிங்ஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்திய ஆட்டங்களில் கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்த முறை அவருக்கு கூடுதல் அழுத்தம் உள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் தனது முதல் T20I ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ளார். உள்ளூர் ரசிகர்கள் “நம்ம ஊரு பையன்” என பெருமையுடன் அவரிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்நோக்குகின்றனர். இந்திய அணியை ஏற்றிச் சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்கியதும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்ஸன் சொந்த ஊர் என்பதை கூறினார்.

இதையும் படிங்க:இந்தியாவை ஒலிம்பிக் அழைத்துச் சென்ற ஹாக்கி பயிற்சியாளர் நாப்ஸ் மரணம்.. யார் இவர்? முழு விவரம்!

சஞ்சு சாம்சன் அந்த தருணத்தில் சற்று வெட்கப்பட்டாலும், கேரளாவில் அவருக்கான ரசிகர் ஆதரவு மிகச் சிறியது அல்ல. “நம்ம ஊரு பையன்” என்ற பெருமையுடன் ரசிகர்கள் அவரைச் சுற்றி கொண்டாடுவது, அவரது சொந்த ஊரில் நடைபெறும் போட்டிக்கு தனித்துவமான சூழலை உருவாக்கியுள்ளது. 31 வயதான சஞ்சு சாம்சன், 2024 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்தாலும், ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை, அவர் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் இடத்திற்கான முன்னணி வீரராகக் கருதப்படுகிறார்.

, இந்த வாய்ப்பை அவர் வீணாக்காமல், தனது திறமையை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சொந்த ஊரில் நடைபெறும் போட்டி என்பதால், அவருக்கு ரசிகர்களின் ஆதரவும், அதே நேரத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகளும் மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 2024 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்தும் விளையாடாத சஞ்சு சாம்சன், இப்போது விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் இடத்திற்கான முன்னணி வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தருக்கு எலும்பு காயம்? 2026 டி-20 உலக கோப்பையில் ஆடுவாரா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com