MS Dhoni | மகேந்திர சிங் தோனியின் அமெரிக்க பயணம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
MS Dhoni | மகேந்திர சிங் தோனியின் அமெரிக்க பயணம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
Published on: September 18, 2024 at 11:08 pm
MS Dhoni |சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சமீபத்தில் அமெரிக்காவில் தனது நெருங்கிய நண்பர்கள் சிலருன் இணைந்து ஜாலியான ட்ரிப் ஒன்றை அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோவில், தோனி தனது நண்பர்களில் ஒருவரான ஹிதேஷ் சங்வி, முன்னாள் இந்திய கேப்டனுடன் ஒரு கால்பந்து மைதானத்தின் ஸ்டாண்டில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
இந்த காணொலியை தோனி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் 2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதன்படி, பிசிசிஐ ஓய்வு பெற்ற சர்வதேச வீரர்களை அன்கேப்டு என வகைப்படுத்தும் மிகவும் விவாதத்திற்குரிய நடவடிக்கையை பரிசீலித்து வருகிறது.
ஐபிஎல் 2025 வீரர்களின் விதிமுறைகள் மற்றும் தக்கவைப்பு குறித்த விதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால், தோனியே தொடர்ந்து விளையாட விரும்புகிறாரா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு விதிகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: இனி ஆண், பெண் வேறுபாடு இல்லை; ஒரே பரிசுத்தொகை தான்: ஐ.சி.சி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com