ஆசிய பாரா விளையாட்டு.. மோனாவுக்கு தங்கம்.. அவனிக்கு வெள்ளி!

Asian Para Games Medals: ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் மோனாவுக்கு தங்கமும், அவனிக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளன.

Published on: October 20, 2026 at 1:10 pm

நகோயா, அக்.20, 2026: ஜப்பானின் நகோயாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனைகள் மோனா அகர்வால் தங்கப் பதக்கமும், அவனி லெகரா வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (SH1) பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளி என இரட்டைப் பதக்கங்களைக் கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் தொடக்கத்தில் பின்தங்கியிருந்த 38 வயதான மோனா அகர்வால், சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் முன்னிலைக்கு வந்தார். அவர் மொத்தம் 250 புள்ளிகள் பெற்று, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் புதிய சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

நடப்பு சாம்பியனான அவனி லெகரா 249.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கடைசி சுற்று வரை இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தென் கொரியாவின் யுன்ரி லீ 227.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இந்தப் பதக்கத்தின் மூலம், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் இரண்டாவது தகுதி இடமும் உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே உலக துப்பாக்கிச் சுடுதல் பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் மோனா வெள்ளிப் பதக்கம் வென்று ஒரு தகுதி இடத்தைப் பெற்றிருந்தார். ஆசியப் போட்டியில் இந்திய வீராங்கனைகளின் இந்தச் சாதனை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

இதையும் படிங்க : உலக சாதனையை சமன் செய்த ஷீத்தல் தேவி.. போடுடா வெடிய!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com