Sheetal Devi Archery Record: ஷீத்தல் தேவி, உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.
Sheetal Devi Archery Record: ஷீத்தல் தேவி, உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

Published on: October 20, 2026 at 12:36 pm
நகோயா, அக்.20, 2026: ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி உலக சாதனையைச் சமன் செய்து சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான காம்பவுண்ட் வில்வித்தை தகுதிச் சுற்றில், 720 புள்ளிகளுக்கு 704 புள்ளிகள் பெற்று அசத்தியுள்ளார். இதன்மூலம் புதிய ஆசிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
கைகள் இல்லாமல், தனது கால்களால் வில்லை நிலைநிறுத்தி, தோள்பட்டை மற்றும் தாடையின் உதவியுடன் அம்பு எய்யும் ஷீத்தல் தேவி, 72 அம்புகளில் 57 முறை 10 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதில் 32 அம்புகள் இலக்கின் மையப் பகுதியில் துல்லியமாகப் பாய்ந்தன. ஏற்கெனவே அவர் படைத்திருந்த 698 புள்ளிகள் என்ற ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.
தொடர்ந்து, ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் 698 புள்ளிகள் பெற்ற தோமன் குமாருடன் இணைந்து, கலப்பு அணிப் பிரிவில் ஷீத்தல் தேவி போட்டியிட்டார். இருவரும் சேர்ந்து 1,402 புள்ளிகள் குவித்து, முந்தைய உலக சாதனையான 1,400 புள்ளிகளை முறியடித்தனர். இதன்மூலம் காலிறுதிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளனர்.
மகளிர் காம்பவுண்ட் அணிப் பிரிவில் ஷீத்தல் தேவி மற்றும் பாயல் நாக் இணைந்து 1,379 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தனர். ஆடவர் ரிகர்வ் அணிப் பிரிவிலும் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இந்திய வீரர்களின் இந்தச் சிறப்பான செயல்பாடு, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வெல்லும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. தொடரையும் கைப்பற்றியது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com