ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. தொடரையும் கைப்பற்றியது!

India Women Series Win: ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

Published on: October 19, 2026 at 3:25 pm

புதுடெல்லி, அக்.19, 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே அணியில் சிப்போ முகேரி-திரிபானோ 34 ரன்களும், கேப்டன் ஜோசபின் நகோமோ 27 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் நிகி பிரசாத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மற்ற பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு ஜிம்பாப்வே அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர்.

பின்னர் 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை எளிதாக்கினர்.

இந்திய அணி 8.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தலைமையில் இந்திய மகளிர் அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : மானசி ஜோஷி – துளசிமதி முருகேசன் ஜோடி அபாரம்.. இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com