Mohammad Amir: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர், விராட் கோலியுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து, அவரை சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் மனிதர் என அழைத்துள்ளார்.
Mohammad Amir: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர், விராட் கோலியுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து, அவரை சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் மனிதர் என அழைத்துள்ளார்.
Published on: September 19, 2025 at 12:57 pm
Updated on: September 19, 2025 at 1:03 pm
துபாய், செப்.19, 2025: பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 பிரிவில் மீண்டும் மோதவுள்ளன. அதன்படி, இரு ஹெவிவெயிட் அணிகளும் ஞாயிற்றுக்கிழமை (செப்.21,2025) துபாய் சர்வதேச மைதானத்தில் களமிறங்கத் தயாராகின்றன.
முன்னதாக இரு நாட்டு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக் கொள்ளவில்லை. இந்த மோதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இடையே மோதலுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், விராட் கோலியுடன் ஒரு படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
2016 டி20 உலகக் கோப்பையில் எடுக்கப்பட்ட படத்தை பகிர்ந்துள்ள அமீர், “அதில் இந்தியாவின் சிறந்த வீரர் மற்றும் நல்ல மனிதர்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு சற்று முன்பு கோஹ்லின் தனக்கு ஒரு பேட் பரிசளித்தார் எனவும் கூறியுள்ளார்.
இந்தக் கருத்து முன்னாள் இந்திய கேப்டனுக்கு ஒரு பாராட்டாக இருக்கலாம். எனினும் இரு அணிகளும் கைகள் குலுக்கிக் கொள்ளாத சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
இதையும் படிங்க : நீரஜ் சோப்ராவுக்கு என்னாச்சு? ஜப்பான் மண்ணில் கடும் ஏமாற்றம்.. 8வது இடத்துக்கு தள்ளப்பட்ட சாம்பியன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com