IPL 2025 RR vs LSG Score: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஜெய்ப்பூரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (180/5) ராஜஸ்தான் ராயல்ஸை (178/5) 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
IPL 2025 RR vs LSG Score: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஜெய்ப்பூரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (180/5) ராஜஸ்தான் ராயல்ஸை (178/5) 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Published on: April 19, 2025 at 11:49 pm
ஜெய்ப்பூர், ஏப்.19 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (ஏப்.19 2025) ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஸ் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
ஆனால் மறுபுறம் ஆல்டன் மார்க்ரம் 45 ரன்னில் 66 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும். தொடர்ந்து, நிகோலஸ் பூரான் 11 ரன்னிலும், ரிஷப் பந்த் 3 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 30 பந்துகளில் 50 ரன்னும் அடித்தார்.
இதில் 1 சிக்ஸர் 5 பவுண்டரி அடங்கும். தொடர்ந்து, டேவிட் மில்லர் 7 ரன்னிலும், அப்துல் சமத் 10 பந்துகளில் 30 ரன்னும் அடித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்
இதையடுத்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதில், 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும்.
Dal baati choorma, Avesh bhai soorma💙 pic.twitter.com/S0V2hBbJHF
— Lucknow Super Giants (@LucknowIPL) April 19, 2025
அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இதில், 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். தொடர்ந்து, நிஷாந்த் ரானா 8 ரன்னிலும், ரியான் பராக் 39 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
சிம்ரோன் ஹெட்மியார் 12 ரன்னிலும் நடையை கட்டினார். துருவ் மற்றும் ஷிவம் துபே கடைசி வரை அவுட் ஆகாமல் முறையே 6 மற்றும் 3 ரன்கள் எடுத்து இருந்தார்கள்.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இளம் வீரர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com