IPL 2025 final: ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
IPL 2025 final: ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் கொல்கத்தாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: May 12, 2025 at 6:54 pm
புதுடெல்லி, மே 12 2025: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் (இந்தியன் பிரீமியர் லீக்) விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தமுறை வெற்றிபெறப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் ஒரு வார காலம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால் போட்டி தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இறுதிப் போட்டி, முதலில் மே 25 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறம் என்று அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அந்த நாளில் கொல்கத்தாவில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இறுதிப் போட்டியை அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு மாற்றும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய திட்டமிடலின் படி, இறுதிப் போட்டி ஜூன் 1 அன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம், மழை காரணமாக தடைகள் ஏற்படாதபடி தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது .
2022 மற்றும் 2023 ஆண்டுகளில் ஐபிஎல் இறுதிப் போட்டிகள் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. அதனால், இந்த மைதானம் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. போட்டியின் இறுதி தேதி மற்றும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறேன்’: விராத் கோலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com