T20 International : இந்தியா- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மோதும் இறுதிப் போட்டி இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
T20 International : இந்தியா- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மோதும் இறுதிப் போட்டி இன்று மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

Published on: December 30, 2025 at 5:30 pm
Updated on: December 30, 2025 at 6:59 pm
திருவனந்தபுரம், டிச.30, 2025: பெண்கள் கிரிக்கெட்டில், இன்று கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள Greenfield International Stadium-இல் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன. இது 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் இறுதி போட்டி ஆகும். போட்டி மாலை 7 மணிக்கு தொடங்கும்.
இந்தத் தொடரைப் பொறுத்தவரை, ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 4–0 முன்னிலையில் உள்ளது. அதன்படி, இன்று வெற்றி பெற்றால், தொடரை க்ளீன் ஸ்வீப் செய்யும் வாய்ப்பு உள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4வது போட்டியில், இந்தியா 222 ரன்கள் என்ற பெரிய இலக்கை பாதுகாத்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா முழுமையான ஆட்டத்தால் எளிதில் வெற்றி பெற்றது.
இந்த தொடர், வரவிருக்கும் பெண்கள் T20 உலகக் கோப்பைக்கான தயாரிப்பில் முக்கியமானதாகும். அடுத்த மாதம் தொடங்கும் பெண்கள் பிரீமியர் லீக்கிற்கான திறன்களை மேம்படுத்தும் மேடையாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நியூசி வீரர் டக் பிரேஸ்வெல் ஓய்வு.. யார் இவர்? ஆஸிக்கு எதிராக மறக்கமுடியாத இன்னிங்ஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com