இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அணி.. சென்னையில் போட்டி எப்போது தெரியுமா?

India Announce Afghanistan Squad : இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. இதில் மூன்றாவது போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

Published on: May 20, 2026 at 11:28 am

புதுடெல்லி, மே 20, 2026: இந்தியா – ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நான்கு புதிய வீரர்கள் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் டெஸ்ட் துணை கேப்டனாகவும், ஷ்ரேயஸ் ஐயர் ஒருநாள் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரிஷப் பந்த்

இந்தத் தொடரில் ஒருநாள் அணியில் இருந்தும், டெஸ்ட் துணை கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரிஷப் பந்த் நீக்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில்-ஐ பொறுத்தமட்டில் அவருக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

4 புதிய முகங்கள்

மேலும், இந்தத் தொடரில், மணவ் சுதார், குர்னூர் ப்ரார், பிரின்ஸ் யாதவ், ஹர்ஷ் துபே உள்ளிட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வீரர்களும் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டி

இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டி ஜூன் 6 முதல் 10ஆம் தேதிவரை சண்டிகரில் நடக்கிறது. அதேநேரம் ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் முதல் போட்டி ஜூன் 14, தர்மசாலாவிலும், ஜூன் 17, லக்னோவிலும், ஜூன் 20, சென்னையிலும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க : ஆசியப் போட்டிகளில் பங்கேற்பது கடினம்.. நிவாரணம் இல்லை, சிக்கலில் வினேஷ் போகத்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com