Asia Cup 2025: பாகிஸ்தான் அமைச்சரும் ஏ.சி.சி தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது.
Asia Cup 2025: பாகிஸ்தான் அமைச்சரும் ஏ.சி.சி தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது.
Published on: September 29, 2025 at 12:51 pm
துபாய், செப்.29, 2025: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.28, 2025) மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கடைசி வரை 69 ரன்களுடன் களத்தில் நின்று இந்தியாவின் வெற்றிக்கு உதவினார் திலக் வர்மா.
இந்த நிலையில், ஆசியக் கோப்பை சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து வெற்றியாளர் கோப்பையை ஏற்க மறுத்துவிட்டது.
பரிசளிப்பு விழா தொடங்குவதற்காக நக்வி ஒரு பக்கத்தில் நின்றபோது, இந்திய வீரர்கள் 15 யார்டுகளுக்குள் நின்று கொண்டிருந்தனர். தங்கள் இடங்களிலிருந்து அசைய மறுத்து அப்படியே நின்றனர். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : பாகிஸ்தானை பந்தாடிய திலக் வர்மா.. தெலுங்கு பைய்யா.. வாழ்த்திய சந்திரபாபு நாயுடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com