FIH Pro League: இந்திய ஹாக்கி அணிக்கு ஆஸ்திரேலியாவில் திடீர் தோல்வியை சந்தித்துள்ளது.
FIH Pro League: இந்திய ஹாக்கி அணிக்கு ஆஸ்திரேலியாவில் திடீர் தோல்வியை சந்தித்துள்ளது.

Published on: February 23, 2026 at 5:00 pm
மெல்போர்ன், பிப்.23, 2026: இந்திய ஹாக்கி அணிக்கு ஆஸ்திரேலியாவில் திடீர் தோல்வியை சந்தித்தது. அதாவது, எஃப்.ஐ.ஹெச் (FIH) ப்ரோ லீக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவிடம் 5-4 என்ற கணக்கில் பெனால்டி ஷூட்-அவுட்டில் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் ஆரம்பம் முன்னிலையில் காணப்பட்டது. அதாவது, 15வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ், 43வது நிமிடத்தில் ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தனர். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் ஜோயல் ரிண்டாலா 47 மற்றும் 56வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து சமநிலைக்கு கொண்டுவந்தார்.
இதனால் போட்டி 2-2 என்ற சமநிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளும் முதல் நான்கு முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றின. ஆனால், இந்திய வீரர் ஆதித்ய லாலாகேவின் முயற்சியை ஆஸ்திரேலிய கீப்பர் ஜெட் ஸ்னோடன் தடுத்ததால், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதற்கிடையில், இந்தியா அடுத்த போட்டியில் ஹோபார்ட் சுற்றின் மூன்றாவது ஆட்டமாக ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா.. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com