Virat Kohli | இந்தியா வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்.19ஆம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்குபெற விராத் கோலி அதிகாலை 4 மணிக்கே சென்னை திரும்பினார்.
Virat Kohli | இந்தியா வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்.19ஆம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்குபெற விராத் கோலி அதிகாலை 4 மணிக்கே சென்னை திரும்பினார்.
Published on: September 13, 2024 at 10:32 am
Virat Kohli | சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் லண்டனில் இருந்து அதிகாலை 4 மணிக்கெல்லாம் விராத் கோலி சென்னை வந்து சேர்ந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு சென்றார்.
வங்கதேசம் பல்வேறு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி இருந்தாலும் சென்னையில் அந்த அணிக்கு இது முதல் டெஸ்ட் போட்டி ஆகும். இந்தத் தொடருக்கு பின்னர் இந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இதனால், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந்த அணியின் செயல்பாடு முக்கியமானதாக இருக்கும்.
இந்திய அணி வீரர்கள்
ரோஹித் சர்மா (சி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
இதையும் படிங்க: சேப்பாகத்தில் முதல் டெஸ்ட்: ரோகித் கேப்டன் – இந்திய அணி அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com