Champions Trophy 2025: 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியர்களின் ஆட்டம் எப்படி இருந்தது? யார் அதிக ரன்களை குவித்தது? சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் பிப்.19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைந்தன.
Champions Trophy 2025: 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியர்களின் ஆட்டம் எப்படி இருந்தது? யார் அதிக ரன்களை குவித்தது? சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் பிப்.19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைந்தன.
Published on: March 12, 2025 at 9:43 pm
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9ஆம் தேதி) இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன் டிராபியை வென்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
கேப்டன் ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். நான்காவது இடத்தில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்தார் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்ற முதல் அணி இந்தியா என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய வீரர்கள் யார் எவ்வளவு ரன் எடுத்தார்கள்? எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ரோகித் சர்மா
ரோகித் சர்மா இந்தியாவிற்கான 5 போட்டிகளில் 180 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்துடன் நடந்த பைனலில் 83 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர்
2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் முன்னணி வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு ஆட்டம் இழந்த அவர் தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்டங்களில் 56, 79, 45 மற்றும் 48 ரன்கள் எடுத்தார். மொத்தம் 243 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
விராட் கோலி
விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டவிழாக்காமல் இருந்தார். மேலும் முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிலாக்காமல் இருந்தார். இந்த போட்டியில் மொத்தம் 218 ரன்கள் எடுத்துள்ளார்.
சுக்மன் கில்
உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேனான சுக்மன் கில் முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான 229 ரன்கள் என்ற இலக்கை துறத்தி 101 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். ஆனால் அடுத்த நான்கு போட்டிகளில் அதே ஆட்டத்தை தக்க வைக்க தவறிவிட்டார். மொத்தம் 188 ரன்கள் எடுத்துள்ளார்.
கே எல் ராகுல்
இந்தியாவிற்கான ஐந்து ஆட்டங்களில் நான்கில் பேட்டிங் செய்த கே. எல். ராகுல் மொத்தம் 140 ரன்கள் எடுத்துள்ளார். 3 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஆறு கேச்சுகளையும் ஒரு ஸ்டம்பிங் செய்துள்ளார்.
இதையும் படிங்க ராயல் சேலஞ்ச் பெங்களூரு புதிய கேப்டன்.. ராஜத் படிதார் சொத்து மதிப்பு தெரியுமா?
அக்சர் பட்டேல்
குஜராத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான அச்சர் படேல் 2025 சாம்பியன் டிராபியில் 4. 35 என்று எகானமியுடன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரவீந்திர ஜடேஜா
சீனியர் ஆல்ரவுண்டரான ரவீந்தர் ஜடேஜா 5 விக்கெட்டுகளுடன் மூன்று இன்னிங்ஸ்களில் 27 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கான வெற்றி ரல்களை குவித்தார்
ஹர்திக் பாண்டியா
ஐந்து போட்டிகளில் ஆடி 99 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 45 பந்தில் 45 களில் எடுத்தது அவரது சிறந்த ஆட்டமாகும். மேலும் இந்த ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
வருண் சக்கரவர்த்தி
இந்தியாவிற்கான மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய வருண் சக்கரவர்த்தி 9 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ்
இந்தியாவுக்கான 5 போட்டிகளிலும் விளையாடிய குல்தீப் யாதவ் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முகமது சமி
முகமது சமி மொத்தம் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதில் பங்களாதேஷிற்கு எதிரான ஆட்டத்தில் 10 ஓவர்களில் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஹர்சித் ராணா
ஹர்ஷித்ரானா இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் மூன்று விக்கட்டுகளையும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதையும் படிங்க ஐ.சி.சி. சான்பியன்ஷிப் 2025: கனே வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் யாதவ்.. வீடியோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com