Harmanpreet Kaur: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை சர்ச்சைகள் குறித்து ஹர்மன்ப்ரீத் கவுர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்:
Harmanpreet Kaur: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை சர்ச்சைகள் குறித்து ஹர்மன்ப்ரீத் கவுர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்:
Published on: September 27, 2025 at 12:33 pm
புதுடெல்லி, செப்.27, 2025: மகளிர் உலகக் கோப்பை தொடக்க ஆட்டம் செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், முதல் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. முன்னதாக, சமீபத்திய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 152 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதற்கிடையில், ஹர்மன்ப்ரீத் கவுர் அணி அக்டோபர் 5 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. தொடர்ந்து, இந்திய ஆண்கள் அணி 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
இதையும் படிங்க: கருண் வெளியே, படிக்கல் உள்ளே.. நாயருக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் அகர்கர்!
இந்த நிலையில், இரு அணிகளும் ஏற்கனவே நடந்து வரும் போட்டிகளில், குழு நிலையிலும், சூப்பர் ஃபோர் சுற்றிலும் இரண்டு முறை மோதியுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் கைகுலுக்கல் சர்ச்சை, வாய்மொழி செய்கைகள் என இரண்டு போட்டிகளிலும் சர்ச்சைக்குரிய தருணங்கள் இருந்தன.
இதற்கிடையில், வரவிருக்கும் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் ஹர்மன்ப்ரீத் உறுதியாக உள்ளார். இது குறித்து ஹர்மன்ப்ரீத், “எந்தவொரு வீராங்கனைக்கும் உங்கள் நாட்டை வழிநடத்துவது எப்போதும் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையில் நாட்டை வழிநடத்துவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. அதற்கு மேல், இது ஒரு சொந்த உலகக் கோப்பை, எனவே இது இன்னும் சிறப்பு வாய்ந்தது” என்றார்.
இதையும் படிங்க: சூர்ய குமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்.. இன்று தீர்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com