Jagbir Singh | நாட்டின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளர் ஜக்பீர் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Jagbir Singh | நாட்டின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளர் ஜக்பீர் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on: January 4, 2025 at 4:34 pm
நாட்டின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளர் ஜக்பீர் சிங்குக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் ஐ.சி.யூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து வெளியான அறிக்கையில், “ஜக்பீர் தன்னுடன் இணைந்துள்ள டீம் கோனாசிகாவின் பயிற்சிக்குப் பிறகு ஹோட்டலுக்குச் சென்றார்.
அங்கு அவருக்கு மார்பில் வலி ஏற்பட்டது. இதை உணர்ந்த ஜக்பீர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இப்போது ஐசியூவில் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
59 வயதான முன்னாள் ஏர் இந்தியா ஊழியரான ஜக்பீர் சிங் 1988 ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும், 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக்கிலும் இந்திய அணியை பிரதிநிதித்துவப் படுத்தினார்.
இந்நிலையில், 2004 ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு ஜக்பீர் சிங் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com