Yuvraj Singh summoned by ED: கிரிக்கெட்டர்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இருவருக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Yuvraj Singh summoned by ED: கிரிக்கெட்டர்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இருவருக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Published on: September 16, 2025 at 9:28 pm
புதுடெல்லி, செப்.16, 2025: சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்களுக்கு எதிரான பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறை நடத்திவருகிறது. இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், அமலாக்க இயக்குநரகம் (ED), மேலும் இரண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்கள் பல தளங்களைப் பயன்படுத்தி, மாற்று விளம்பரங்களைப் கொண்டு நிதி சேகரிக்கின்றன என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (செப்.16, 2025) தெரிவித்தனர்.
ராபின் உத்தப்பாவுக்கு சம்மன்
இந்நிலையில், வலது கை பேட்ஸ்மேனான உத்தப்பா, செப்டம்பர் 22 ஆம் தேதி ED தலைமையகத்தில் ஆஜராகி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
யுவராஜ் சிங் ஆஜராக உத்தரவு
இந்நிலையில், அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனில், யுவராஜ் சிங் செப்டம்பர் 23 ஆம் தேதி விசாரணை நிறுவனத்தின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் ரெய்னா மற்றும் தவான் ஆகியோர் முறையே ஆகஸ்ட் 13 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் நிதி குற்றப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்டனர்.
என்ன பிரச்னை?
ஆன்லைன் பெட்டிங் தளங்கள் இந்திய அரசாங்கத்தின் பல சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறுகின்றன, இதில் வரி ஏய்ப்பு, பணமோசடி மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது சுமார் 220 மில்லியன் இந்திய பயனர்கள் பல்வேறு பந்தய செயலிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இவர்களில் 110 மில்லியன் பேர் வழக்கமான பயனர்கள் என்றும் அதிகாரி கூறினார்.
இதையும் படிங்க : 30 லிட்டர் தாய்ப் பால் தானம்.. பிரபல வீராங்கனை அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com