Vaibhav Suryavanshi is like prime Yuvraj: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது ஐபிஎல் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.
Vaibhav Suryavanshi is like prime Yuvraj: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது ஐபிஎல் அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார்.
Published on: April 20, 2025 at 11:07 am
புதுடெல்லி, ஏப்.20 2025: ஜெய்ப்பூரில் சனிக்கிழமை (ஏப்.19 2025) நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தனது அறிமுக போட்டியில் களம் கண்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐ.பி.எல் வரலாற்றில் 14 வயதில் அறிமுகமான வைபவ், தனது வாழ்க்கையின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரருக்கு உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் பாராட்டுகளை தெரிவித்தார்.
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
பீகாரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூரின் முதல் பந்தை சிக்ஸ் அடித்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தை தொடங்கினார்.
இந்த ஷாட்டின் மூலம், ராப் குயினி (ஆர்ஆர்), கெவோன் கூப்பர் (ஆர்ஆர்), ஆண்ட்ரே ரஸ்ஸல் (கேகேஆர்), கார்லோஸ் பிராத்வைட் (டிடி, இப்போது டெல்லி கேபிடல்ஸ்), அனிகேத் சவுத்ரி (ஆர்சிபி), ஜாவோன் சியர்லஸ் (கேகேஆர்), சித்தேஷ் லாட் (எம்ஐ), மகேஷ் தீக்ஷனா (சிஎஸ்கே) மற்றும் சமீர் ரிஸ்வி (சிஎஸ்கே) ஆகியோர் அடங்கிய பிரத்யேக கிளப்பில் இணைந்தார்.
சாம் பில்லிங்ஸ் பாராட்டு
This is utterly absurd!!!!! 14! First ball 😂🤯😂
— Sam Billings (@sambillings) April 19, 2025
Look at that bat swing too, like prime Yuvi… wow 🤩 https://t.co/7mELxq4aQP
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸிடமிருந்து வைபவ்க்கு பாராட்டுகள் வந்தன. அதில், வைபவ்-ஐ இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங்குடன் ஒப்பிட்டு பேசினார்.
“முதல் பந்துல அந்த பேட் ஸ்விங்கையும் பாருங்க, பிரைம் யுவி மாதிரி… வாவ்” எனத் தெரிவித்து இருந்தார்.
சுந்தர் பிச்சை பாராட்டு
Woke up to watch an 8th grader play in the IPL!!!! What a debut! https://t.co/KMR7TfnVmL
— Sundar Pichai (@sundarpichai) April 19, 2025
“ஐபிஎல்லில் 8 ஆம் வகுப்பு மாணவனின் ஆட்டத்தைப் பார்க்க எழுந்தேன்!!!! என்ன ஒரு அறிமுக ஆட்டம்!” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இளம் வீரர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com