youngest player in IPL cricket: 14 வயதில் ஐபிஎல் வரலாற்றில் இளைய அறிமுக வீரர் ஆனார் வைபவ் சூர்யவன்ஷி. அவர் இன்றைய அறிமுக ஆட்டத்தில் 34 ரன்கள் குவித்தார்.
youngest player in IPL cricket: 14 வயதில் ஐபிஎல் வரலாற்றில் இளைய அறிமுக வீரர் ஆனார் வைபவ் சூர்யவன்ஷி. அவர் இன்றைய அறிமுக ஆட்டத்தில் 34 ரன்கள் குவித்தார்.
Published on: April 19, 2025 at 10:56 pm
ஜெய்ப்பூர், ஏப்.19 2025: ஜெய்ப்பூரில், சனிக்கிழமை (ஏப்.19 2025) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில், சஞ்சு சாம்சன் மீண்டும் விளையாடவில்லை. வயிற்று காயம் காரணமாக சாம்சன் அணியில் இடம்பெறவில்லை. இதனால், ரியான் பராக் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதற்கிடையில், 14 வயதான வைபவ் சூரியவன்ஷி ஐபிஎல்லில் அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் இம்பாக்ட் மாற்று வீரராக நியமிக்கப்பட்டார். லக்னோ (எல்எஸ்ஜி) டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தது.
ஆர்ஆர் அணிக்காக ரன்-சேஸில் அவர் தொடக்க வீரராக சாம்சனுக்குப் பதிலாக களமிறங்குகிறார். எல்எஸ்ஜி 20 ஓவர்களில் 180/5 ரன்கள் எடுத்த பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சூரியவன்ஷி ரன்-சேஸைத் தொடங்கினார்.
அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி
இந்த நிலையில், முதல் ஆட்டத்திலே சூர்யவன்ஷி அதிரடியாக ஆடினார். அவர் 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இதில் 2 பவுண்டர, 3 சிக்ஸர்கள் அடங்கும். லக்னோ, ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்களை டார்கெட் ஆக நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் ரன் சேஷிங்கை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க : கே.எல். ராகுல் மகள் பெயர் தெரியுமா? அவரே வெளியிட்ட தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com