Danish Kaneria: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, “பாகிஸ்தான் எனது “ஜென்மபூமி” (பிறந்த நாடு) என்றும், இந்தியா தனது “மாத்ருபூமி” (தாய்நாடு) என்றும் கூறினார்.
Danish Kaneria: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, “பாகிஸ்தான் எனது “ஜென்மபூமி” (பிறந்த நாடு) என்றும், இந்தியா தனது “மாத்ருபூமி” (தாய்நாடு) என்றும் கூறினார்.
Published on: October 5, 2025 at 2:24 pm
புதுடெல்லி, அக்.5, 2025: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் மக்களிடமிருந்து பெற்ற அன்புக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். எனினும், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் “ஆழ்ந்த பாகுபாடு” மற்றும் “கட்டாய மதமாற்ற முயற்சிகளை” எதிர்கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
Lately, I have seen many people questioning me, asking why I do not speak about Pakistan, why I comment on Bharat’s internal matters, and some even alleging that I do all this for Bharatiya citizenship. I feel it is important to set the record straight.
— Danish Kaneria (@DanishKaneria61) October 4, 2025
From Pakistan and its…
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் டேனிஷ் கனேரியா, “சமீப காலமாக, பலர் என்னிடம் கேள்வி கேட்பதை நான் பார்த்திருக்கிறேன், நான் ஏன் பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவதில்லை, ஏன் இந்தியாவின் உள் விவகாரங்களில் கருத்து தெரிவிக்கிறேன். சிலர் நான் இதையெல்லாம் பாரதிய குடியுரிமைக்காகச் செய்கிறேன் என்று கூடக் கூறுவதைக் காண்கிறேன். குற்றச்சாட்டை நேராக்குவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க : அரசியலாக்க வேண்டாம்.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சனா விளக்கம்!
இந்தியா என் தாய்நாடு
தொடர்ந்து, “பாகிஸ்தான் எனது “ஜென்மபூமி” (பிறந்த பூமி) என்றும், இந்தியா எனது “மாத்ருபூமி” (தாய்நாடு) என்றும் கூறிய முன்னாள் லெக் ஸ்பின்னர், அந்த நாட்டை “எனது மூதாதையர்களின் நிலம்” என்றும், தனக்கு “கோயில் போன்றது” என்றும் கூறினார்.
பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய சில இந்து வீரர்களில் ஒருவரான கனேரியா, பாகிஸ்தான் தேசிய அணியில் இருந்த கால கட்டத்தில் மத பாகுபாடுக்கு ஆளாக்கப்பட்டார். இவரை சக வீரர்களே மத மாற்றத்தில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும், இவருக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இதனை டேனிஷ் கனேரியா சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : இனி நீங்கதான்.. ODI கேப்டன் சுப்மன் கில்.. அப்போ ரோஹித்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com