Gautam Gambhir: ‘கௌதம் கம்பீர் குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டோம், தேர்வாளர்கள் மற்றும் அணியுடன் பேசுவோம்’ என இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Gautam Gambhir: ‘கௌதம் கம்பீர் குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டோம், தேர்வாளர்கள் மற்றும் அணியுடன் பேசுவோம்’ என இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Published on: November 27, 2025 at 1:30 pm
புதுடெல்லி, நவ.27, 2025: 12 மாதங்களில் இந்தியா இரண்டாவது முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, தனது தலைவிதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தான் முடிவு செய்ய வேண்டும் என்று கவுதம் கம்பீர் கூறினார். இதற்கிடையில், தலைமை பயிற்சியாளர் அல்லது தற்போதைய வீரர்கள் குழு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாது என்று வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, வரவிருக்கும் உலகக் கோப்பைகளுக்கு முன்பு கம்பீரின் எதிர்காலம் குறித்து வாரியம் எந்த முடிவுகளையும் எடுக்காது என்றும், கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்தில் இருப்பதாகவும் பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதை முடிவு செய்வது பிசிசிஐ தான். நான் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றபோது எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்திய கிரிக்கெட் முக்கியம் என்று சொன்னேன்; நான் முக்கியம் இல்லை. நான் இங்கே அதே விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்” என்றார். மேலும், ‘கௌதம் கம்பீர் குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டோம், தேர்வாளர்கள் மற்றும் அணியுடன் பேசுவோம்’ என்றார்.
இதையும் படிங்க : தல தோனி கோட்டைக்கு சென்ற விராத் கோலி.. என்ன விஷயம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com