Achaleshwar Shiva Temple in Rajasthan : நந்தியை காக்க படையெடுத்து வந்த தேனீக்கள்; ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவ லிங்கம்.. எங்கு உள்ளது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.
Achaleshwar Shiva Temple in Rajasthan : நந்தியை காக்க படையெடுத்து வந்த தேனீக்கள்; ஒரே நாளில் 3 நிறமாக மாறும் சிவ லிங்கம்.. எங்கு உள்ளது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.
Published on: February 6, 2025 at 10:40 am
தோல்பூர் அச்சலேஸ்வர் கோவில்: பொதுவாக சிவலிங்கம் கருப்பாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். பனியால் செய்யப்பட்ட சிவலிங்கத்தையும் பார்த்திருப்போம். ஆனால் நிறம் மாறக்கூடிய சிவலிங்கத்தை பார்த்து இருக்கிறீர்களா. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூரில் அமைந்துள்ள அச்சலேஸ்வர் கோவில் ஆகும்.
இங்கு உள்ள சிவபெருமானை மக்கள் அச்சலேஸ்வர் மகாதேவ் என்று அழைப்பது வழக்கம். இந்தக் கோவிலில் நந்தி சிலையும் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள கோவில்களை சுல்தான்கள் தாக்கிய பொழுது நந்தி ஆயிரக்கணக்கான தேனீக்களை படையெடுத்து வந்தவர்கள் மீது ஏவியதால் படையெடுப்பாளர்கள் கோவிலை உடைக்காமல் திரும்பி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு அங்குள்ள சிவலிங்கத்தின் ஆழத்தை கண்டறிய தோண்டப்பட்டது. ஆனால் நூறு அடிக்கு மேல் தேடியும் சிவலிங்கத்தின் முனையை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த காரணத்தால் சிவலிங்கத்தின் ஆழத்தை கண்டறியும் முயற்சி நிறுத்தப்பட்டது. இதைச் சார்ந்த அகழ்வாராய்ச்சிகளும் நிறுத்தப்பட்டன. இங்கு உள்ள சிவலிங்கத்தின் நிறம் ஒரே நாளில் மூன்று முறை மாறுகிறது.
சிவலிங்கத்தின் நிறம் காலையில் சிவப்பு நிறமாகவும், சூரியன் நடுவானில் இருக்கும் மதிய நேரம் காவி நிறமாகவும், இரவு நேரம் கருப்பாகவும் காட்சியளிக்கிறது. இந்த அதிசயத்தை பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் பல இடங்களில் இருந்து இந்த சிவன் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். காலை முதல் இரவு வரை மூன்று முறை நிறம் மாறும் சிவலிங்கம் பார்ப்பதற்கு பிரமிப்பையும் வியப்பையும் ஏற்படுகிறது. இந்த அதிசய நிகழ்ச்சி சிவ பக்தர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com