கன்னியாகுமரியில் அற்புதம் செய்யும் மாயம்மா; எங்கிருந்து வந்தவர் தெரியுமா?

கன்னியாகுமரியில் பல அற்புதங்களை செய்தவர் மாயம்மா.

Published on: November 22, 2024 at 9:00 am

Kanyakumari Mayamma | இந்த உலகத்தில் பல்வேறு ஆன்மீகச் சான்றோர்கள், ஆங்காங்கே அவதரித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே மக்களின் கண்களுக்கு புலப்படுகின்றனர். அந்த சிலரை கூட, வெகு சிலரால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.

இது போன்ற ஆன்மீகம் பலருக்கும் ஏனோ புலப்படவில்லை. சிலர் ஆன்மீகத்தை தங்களது உலகம் என நினைக்கின்றனர்.மற்ற சிலரோ அது கட்டுக்கதை என கடந்து செல்கின்றனர். நான் தற்போது கன்னியாகுமரியில் பல மாயங்கள் செய்த மாயம்மாவைப் பற்றி பார்க்கலாம்.

பலருக்கும் ஓர் கேள்வி தோன்றலாம். யார் இந்த மாயம்மா? அவர் எங்கிருந்து கன்னியாகுமரிக்கு வந்தார்? இங்கு தங்கி இருந்து ஏன் அற்புதங்கள் செய்தார்? என்பன போன்ற பல கேள்விகள் நம்முள் எழுவதை தவிர்க்க முடியாது.

do you know The miracle-working Mayamma of Kanyakumari
மாயம்மா

மாயம்மா அழகிய தோற்றம் கொண்ட ஒரு பெண் துறவியாக இருந்துள்ளார். அவர் வட இந்தியாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து இருக்கலாம் என்றும் வடகிழக்கு மாநிலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வந்து இருக்கலாம் என்றும் தீபத் நாட்டில் இருந்து கூட கன்னியாகுமரிக்கு வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் அவர் எங்கிருந்து வந்தார் அவரின் பூர்வீகம் என்ன என்பன குறித்த எந்த தகவலும் இதுவரை யாருக்கும் தெரியாது. இன்றளவும் அது மர்மமாகவே உள்ளது.

கன்னியாகுமரியில் பல அற்புதங்கள் செய்த இந்த மாயமா தனது உடலை வயதான தோற்றத்தில் பின் நாட்களில் மாற்றிக் கொண்டார் என்ற கருத்தும் நிலவுகிறது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அருள் பாலிக்கும் இந்த மாயம்மா அதிசயம் என்றால் அது மிகையல்ல.!

இதையும் படிங்க பெருமாளுக்கு தலைமுடியை வழங்கிய மலை இளவரசி ; திருப்பதி முடி காணிக்கை வரலாறு

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா? Dharasuram Sri Airavatesvara Temple

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com