Writer Arundhati Roy: பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்யின் பழைய கருத்துக்கள் மீண்டும் வைரலாகிவருகின்றன. அதில் அவர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Writer Arundhati Roy: பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்யின் பழைய கருத்துக்கள் மீண்டும் வைரலாகிவருகின்றன. அதில் அவர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Published on: September 17, 2025 at 12:24 pm
புதுடெல்லி, செப்.17, 2025: “இந்தியா தனது சொந்த குடிமக்கள் மீது தொடர்ந்து போரை நடத்துகிறது; பாகிஸ்தான் தனது இராணுவத்தை இதேபோல் பயன்படுத்தவில்லை” என்று பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் பேசிய பழைய வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. பேராசிரியரும் எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் ஆன்லைனில் பகிர்ந்து கொண்ட இந்தக் கருத்துகள் தற்போது விமர்சனத்தை கிளப்பியுள்ளன. இந்நிலையில், அருந்ததி ராய் வரலாற்றைத் திரித்து, “தனது சொந்த நாட்டிற்கு எதிராக விஷம் கொண்டவர்” என்று பலரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அருந்ததி ராய் கடந்த காலங்களில் (1961) கோவாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபோது இந்தியா உயர்சாதி இந்துக்களுக்கு ஆதரவாக இந்தியா இவ்வாறு நடந்துக்கொள்கிறது எனத் தெரிவித்திருந்தார் எனவும் அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
When irresistible weed meets immovable hallucination.
— Anand Ranganathan (@ARanganathan72) September 15, 2025
According to Arundhati Roy, the 1961 liberation of Goa by India was in reality an Upper-caste Hindu State waging a war against Christians. pic.twitter.com/YXLqaxgskD
சமூக வலைதள பயனர்கள் கருத்து
தற்போது 2.3 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ள இந்த காணொளி, சமூக ஊடகங்களில் ஏராளமான பதில்களைத் தூண்டியுள்ளது. இதற்கிடையில், பல்வேறு சமூக வலைதள பயனர்கள் அருந்ததி ராயை “பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து” மற்றும் “இந்திய வரலாற்றைத் திரிக்கிறார்” என கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க : காங்கிரஸிற்கு 1 சீட் கூட இல்லை.. ஏன் அப்படி பேசினார் தேஜஸ்வி? பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com