Congress | ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை பறிகொடுத்த வினேத் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்.
Congress | ஒலிம்பிக் போட்டியில் பதக்க வாய்ப்பை பறிகொடுத்த வினேத் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்.
Published on: September 6, 2024 at 4:25 pm
Updated on: September 6, 2024 at 11:43 pm
Congress | ஒலிம்பிக் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை வெள்ளிக்கிழமை (செப். 6, 2024) புதுடெல்லியில் சந்தித்து முறைப்படி கட்சியில் இணைந்தனர்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதால், அக்கட்சி சார்பில் அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்களில் ஒருவரா? அல்லது இருவரும் போட்டியிடுவார்களா? என்பது பின்னர் தெரியவரும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறின.
முன்னதாக, வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்தார். புனியா டோக்கியோ கேம்ஸ் வெண்கலப் பதக்கம் வென்றவர். அதேநேரம், வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார்.
50-கிலோ பிரிவில் 100 கிராம் எடைக்கு மேல் அதிகமாக இருந்த காரணத்தினால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும், முன்னாள் பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் சிங் பூஷணுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்கள் இந்த போகத்தும், புனியாவும் ஆவார்கள்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே இன்னமும் முடிவுகள் எட்டப்படவில்லை. ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
வினேஷ் போகத் போட்டி
कांग्रेस अध्यक्ष श्री @kharge की अध्यक्षता में आयोजित 'केंद्रीय चुनाव समिति' की बैठक में हरियाणा विधानसभा चुनाव के लिए कांग्रेस उम्मीदवारों की लिस्ट। pic.twitter.com/0GsZyTFDVD
— Congress (@INCIndia) September 6, 2024
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வினேஷ் போகத் போட்டியிட ஜூலானா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் கட்சியில் இணைந்த முதல் நாளே சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேரளத்தில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள்: பெண் நீதிபதி அமர்வு அமைக்க உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com