Bihar: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த பீகார் பெண் ஒருவர் டி.டி.இ உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Bihar: டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்த பீகார் பெண் ஒருவர் டி.டி.இ உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Published on: October 8, 2025 at 12:44 pm
புதுடெல்லி, அக்.8, 2025: இந்திய ரயில்வே ரயிலின் ஏசி பெட்டிக்குள் டிக்கெட் பரிசோதகருடன் ஒரு பெண் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக வெளியான அந்தக் காணொலியில், “டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படும் அந்தப் பெண், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் செல்லுமாறு டி.டி.இ கேட்டதற்கு, “அவர் என்னை தொந்தரவு செய்கிறார்” என அதிகாரி மீதே குற்றஞ்சாட்டுகிறார்.
வீடியோவில், டிக்கெட் பரிசோதகர் அந்தப் பெண்ணை முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையை காலி செய்யுமாறு உறுதியாகக் கூறுகிறார்.அதாவது, “உங்களிடம் டிக்கெட் இல்லை. இந்த முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையிலிருந்து வெளியேறும்படி நான் உங்களிடம் கேட்கிறேன்.தயவுசெய்து வெளியேறுங்கள், சோதனை அதிகாரப் பகுதியில் டிக்கெட் இல்லாமல் நீங்கள் இங்கே உட்கார முடியாது” என்கிறார்.
“அப்படி எதுவும் இல்லை. நான் போய்விடுகிறேன், ஏன் என்னை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் வேண்டுமென்றே என்னைச் சுட்டிக்காட்டுகிறீர்கள். நீங்கள் வேண்டுமென்றே ஒரு பெண்ணை தொந்தரவு செய்கிறீர்கள்” என்கிறார். மேலும், தொலைபேசியையும் பறிக்க முயல்கிறார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க : HP: நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த பஸ்.. 18 பேர் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com