Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15ஆம் தேதி சென்னை வருகிறார்.
Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15ஆம் தேதி சென்னை வருகிறார்.

Published on: December 13, 2025 at 3:29 pm
புதுடெல்லி, டிச.13, 2025: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டிசம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழ்நாடு வரும் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளார். மேலும், கூட்டணிக்குள் புதிய கட்சிகளை சேர்க்கும் பணிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகள் (இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா பிரதான கட்சியாக உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை இன்னமும் முழுமையாக அறிவிக்கவில்லை. நாம் தமிழர் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தற்போதுவரை எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. இதனால் இம்முறை தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மலைசரிவு பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 9 பேர் துடிதுடித்து மரணம்.. 22 பேர் காயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com