Uddhav Thackeray: மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயப்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், அவர் தாம் இந்தி எதிர்பாளர் அல்ல என்றும் கூறினார்.
Uddhav Thackeray: மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயப்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், அவர் தாம் இந்தி எதிர்பாளர் அல்ல என்றும் கூறினார்.
Published on: April 19, 2025 at 5:34 pm
மும்பை, ஏப்.19 2025: “மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது; மராட்டியத்தில் இந்தியை கட்டாயமாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என சிவசேனா (யூ.பி.டி) உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சிவசேனாவின் (UBT) தொழிலாளர் பிரிவான பாரதிய காம்கர் சேனாவின் ஒரு நிகழ்வில் சனிக்கிழமை (ஏப்.19 2025) உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், “எனது (சிவ சேனா) கட்சிக்கு இந்தி மொழி மீது எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் அது ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறது என்பதுதான் எனது கேள்வி.
மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு நாங்கள் ஏற்கனவே எங்களின் எதிர்ப்பை தெரிவித்து விட்டோம்” என்றார். மராட்டியத்தில் இந்தியை கட்டாய மொழியாக திணிக்கக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மகாராஷ்டிராவில் இந்தி அல்ல எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குற்றப் பத்திரிகையில் ராகுல், சோனியா பெயர்; ரேவந்த் ரெட்டி மௌனம் ஏன்? கே.டி ராமா ராவ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com