Conversion Fraud in Lucknow: லக்னோவில் மதமாற்ற மோசடி தலைவர் என பரவலாக அறியப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Conversion Fraud in Lucknow: லக்னோவில் மதமாற்ற மோசடி தலைவர் என பரவலாக அறியப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: September 29, 2025 at 2:26 pm
லக்னோ, செப்.29, 2025: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மதமாற்ற மோசடி தலைவர் என பரவலாக அறியப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், “அற்புதமான குணப்படுத்துதல்” என்ற கூற்றுக்கள் மூலம் பட்டியல் சாதியினரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இதற்காக இவர்கள் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு சென்று மதமாற்றத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். அதாவது இவர்கள் குழுக்கள் குழுக்களாக பிரிந்து மதமாற்றத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதற்கிடையில், இந்த மதமாற்ற கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை (செப்.29, 2025) தெரிவித்தனர்.
இதையும் படிங்க : மேற்கு வங்கம்; ரயில் மோதி குழந்தை, பெண் உள்பட மூவர் உயிரிழப்பு!
இந்நிலையில் இவர், “பக்தௌரி கேடாவைச் சேர்ந்த மல்கான் (43) ஆவார்” என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இவரை ஹுலஸ்கேடா சாலையில் கைது செய்யப்பட்டதாக துணை ஆணையர் (தெற்கு) நிபுன் அகர்வால் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய காவல் துணை ஆணையர், “இவர் (மல்கான்) மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், ஒரு போலீஸ் குழு அவரைக் கண்டுபிடித்து காவலில் எடுத்தது” என்றார்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீர், லடாக்கில் மத்திய அரசு தோல்வி.. உமர் அப்துல்லா கடும் தாக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com