அஸ்ஸாமில் நொறுங்கி விழுந்த விமானம்.. இரு விமானிகள் உயிரிழப்பு.. யார் இவர்கள்?

Su-30 Fighter Jet Crash அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்கிலாங் மாவட்டத்தில் நடந்த சு-30 எம்.கே.ஐ (Su-30MKI) போர் விமான விபத்தில் இந்திய விமானப்படை (IAF) வீரர்கள் ஸ்குவாட்ரன் லீடர் அனுஜ் மற்றும் பிளைட் லெப்டினன்ட் புர்வேஷ் துரககர் உயிரிழந்தனர்.

Published on: March 6, 2026 at 4:16 pm

புதுடெல்லி, மார்ச் 6, 2026: அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்கிலாங் மாவட்டத்தில் நடந்த சு-30 எம்.கே.ஐ (Su-30MKI) போர் விமான விபத்தில் இந்திய விமானப்படை (IAF) வீரர்கள் ஸ்குவாட்ரன் லீடர் அனுஜ் மற்றும் பிளைட் லெப்டினன்ட் புர்வேஷ் துரககர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட சுகோய் Su-30MKI போர் விமானம் சிக்கியுள்ளது. இதில், இந்தியாவில் முன்னணி போர் விமானமாக திகழ்கிறது. இந்த விபத்து அஸ்ஸாமின் ஆங்கிலாங் மாவட்டத்தில் உள்ள கர்பி என்ற இடத்தில் நடந்துள்ளது.

அதாவது விபத்தானது, ஜோர்ஹாட் விமான தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சி பறப்பாக புறப்பட்ட போது, மார்ச் 5, 2026, வியாழக்கிழமை மாலை நடந்துள்ளது.
இது குறித்து வெளியான தகவலில், மாலை 7.42 மணிக்கு விமானம் தரை கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனுபவமிக்க அதிகாரியான அனுஜ் மற்றும் பிளைட் லெப்டினன்ட் புர்வேஷ் துரககர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து வெளியான இரங்கல் அறிக்கையில், “ஸ்குவாட்ரன் லீடர் அனுஜ் மற்றும் பிளைட் லெப்டினன்ட் புர்வேஷ் துரககர் ஆகியோரின் இழப்பை இந்திய விமானப் படை ஆழ்ந்த துயரத்துடன் ஏற்றுக்கொள்கிறது. இந்த துயர நேரத்தில் அவர்களின் குடும்பத்துடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை… சித்த ராமையா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com