கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Published on: December 23, 2024 at 9:20 pm
Updated on: December 25, 2024 at 7:14 pm
Special Trains | கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கூடுதல் நெரிசலைக் குறைக்கும் வகையில் தற்காலிகமாக நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களை அதிகரிப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
டிச. 22 முதல் ஜன. 3, 2025 வரை ரயில் எண். 16527 யஸ்வந்த்பூர் – கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு ஏசி மூன்று அடுக்கு பெட்டியுடன் தற்காலிகமாக அதிகரிக்கப்படும்.
டிச. 23 முதல் ஜன. 4, 2025 வரை ரயில் எண். 16528 கண்ணூர் – யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு ஏசி மூன்று அடுக்கு பெட்டியுடன் தற்காலிகமாக அதிகரிக்கப்படும்.
டிச. 23, 2024 அன்று ரயில் எண். 17315 வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ஒரு ஏசி மூன்று அடுக்குப் பெட்டியுடன் தற்காலிகமாக அதிகரிக்கப்படும்.
டிச. 24 அன்று ரயில் எண். 17316 வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ஒரு ஏசி மூன்றடுக்கு பெட்டியுடன் அதிகரிக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com