puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
puducherry Election 2026: புதுச்சேரி அரசியலில் லட்சிய ஜனநாயக கட்சி தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது. இந்தக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

Published on: March 18, 2026 at 7:06 pm
Updated on: March 18, 2026 at 7:08 pm
புதுச்சேரி, மார்ச் 18, 2026: புதுச்சேரியில் மூத்த அரசியல் தலைவர் என். ரங்கசாமியின், என்.ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க. மற்றும் பா.ஜனதா போன்ற பாரம்பரிய கட்சிகளே மாநிலத்தின் தேர்தல் முடிவுகளை நிர்ணயித்து வந்தன. இதில் புதிதாக, ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் தலைமையில் வெற்றிகரமாக இயங்கிவரும் லட்சிய ஜனநாயகக் கட்சி இணைந்துள்ளது.
இந்தக் கட்சி கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது; அடிமட்ட மக்கள் மத்தியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம், மன்றங்கள் வழியாக மீனவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் போன்ற சமூகங்களின் பிரச்சினைகளை தொடர்ந்து விவாதித்தது. தொகுதி மட்டத்தில் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. மேலும், உள்ளூர் தலைமைத்துவம் அடையாளம் காணப்பட்டது; ஒழுங்கான செயல்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது.
75 ஆயிரம் உறுப்பினர்கள்
இந்நிலையில் தற்போது குறுகிய காலத்தில் கட்சியில் 75,000-க்கும் மேற்பட்ட செயலில் ஈடுபட்ட உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டனர். அதாவது, 2025 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யானம் ஆகிய பகுதிகளை இணைக்கும் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
இந்தக் கட்சியின் கொள்கைகளான நில உரிமைகள், தொழிலாளர் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து பரப்புரைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கருத்துக் கணிப்புகள்
மேலும், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் லட்சிய ஜனநாயக கட்சி இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை நோக்கி நகர்கிறது எனக் கூறுகின்றன. இது லட்சிய ஜனநாயக கட்சி, நிலையான அரசியல் அமைப்புகளையும் மாற்றக்கூடிய சக்தி கொண்டது என்பதை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர் ராகுல் காந்தி.. கங்கனா ரணாவத்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com