ஊழல் வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊழல் வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா கேள்வியெழுப்பியுள்ளார்.
Published on: September 24, 2024 at 5:13 pm
MUDA case vs Siddharamaiah | மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்துடன் (முடா) தொடர்புடைய நிலம் ஒதுக்கீடு வழக்கில், கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தார்.
இதனை எதிர்த்து, சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்.24, 2024) நிராகரித்தது. இந்த நிலையில் இந்த வழக்கை ஓர் போலி என சித்த ராமையா விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய சித்த ராமையா, “ட்டப்படி விசாரணை அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசிப்பேன். சட்ட வல்லுநர்களுடன் விவாதித்து போராட்டத்தின் வடிவத்தை முடிவு செய்வேன்.
இன்னும் சில நாட்களில் உண்மை வெளிவரும். 17ஏ-யின் கீழ் விசாரணை ரத்து செய்யப்படும் என்றும் நான் நம்புகிறேன். இந்த அரசியல் போராட்டத்தில் மாநில மக்கள் எனக்கு ஆதரவாக நிற்கின்றனர். அவர்களின் ஆசீர்வாதமே எனது பாதுகாப்பு. நான் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தப் போராட்டத்தில் உண்மையே வெற்றி பெறும்” என்றார்.
தொடர்ந்து, “நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? எச்.டி.குமாரசாமி ஜாமீனில் உள்ளார். அவர் ராஜினாமா செய்தாரா? எனக் கேள்வியெழுப்பினார். மேலும், “இது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான போராட்டம். பாஜக மற்றும் ஜே.டி.எஸ்-ன் இந்த பழிவாங்கும் அரசியலுக்கு எதிரான எங்கள் நீதிப் போராட்டம் தொடரும்” என்றார்.
இதையடுத்து, “நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் மேலிடம் எனக்கு ஆதரவாக நின்று, சட்டத்திற்கான போராட்டத்தை தொடர ஊக்குவித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க : நடிகை பாலியல் புகார்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ நடிகர் முகேஷ் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com