Shiv Sena : காங்கிரஸை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சிவசேனா (உத்தவ்) கட்சியை சேர்ந்த தலைவர் பேசிய விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Shiv Sena : காங்கிரஸை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சிவசேனா (உத்தவ்) கட்சியை சேர்ந்த தலைவர் பேசிய விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: December 22, 2025 at 5:02 pm
மும்பை, டிச.22, 2025: அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிஹன்மும்பை மாநகராட்சி (BMC) தேர்தலை முன்னிட்டு, சிவசேனா (UBT) தலைவர் ஆனந்த் துபே ஞாயிற்றுக்கிழமை (டிச.21, 2025) இவ்வாறு பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய ஆனந்த் துபே, “உண்மையான சிவசேனா கடந்த 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று, நகரத்தில் தனது பிடியை நிலைநிறுத்தி வருகிறது” என்றார். மேலும், காங்கிரஸை குறிவைத்து, மும்பை அரசியலில் அதன் பொருத்தமின்மையை சாடினார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், “மும்பையில் காங்கிரஸ் கட்சியை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. கடந்த 30 ஆண்டுகளாக, காங்கிரஸ் தொடர்ந்து மும்பை மாநகராட்சி தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. அப்படியிருக்க, 2026-இல் அவர்கள் என்ன அதிசயம் செய்யப் போகிறார்கள்?” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். காங்கிரஸ் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதற்குப் பின்னால் ஒரு சித்தாந்த அடிப்படை உள்ளது.
இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல; முழு கட்சியின் ஒருமித்த கருத்து தான். மதம், ஜாதி, பிராந்தியம் அல்லது மொழி பெயரில் மோதலை உருவாக்கும் எந்தக் கட்சியையும் எதிர்த்து நாம் போராடப் போகிறோம்.
தேர்தல் மோதல் அடிப்படையில் அல்ல, வளர்ச்சி அடிப்படையில் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார்.
இதையும் படிங்க : இந்தியா – நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்.. இதன் சிறப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com