சரத் பவாருக்கு சிறிய அளவில் நீரிழப்பு பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி!

Sharad Pawar: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Published on: February 23, 2026 at 1:40 pm

மும்பை, பிப்.23, 2026: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சிறிய அளவு நீரிழப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரின் உடல் நிலை குறித்து ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனை தலைவர் டாக்டர் புர்வேஸ் கிராண்ட் கூறுகையில், “சரத் பவார் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. கவலைப்பட வேண்டியதில்லை. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்” என்றார்.

இது குறித்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “புனே ரூபி ஹால் மருத்துவமனையில் அப்பாவை (சரத் பவார்) வழக்கமான பரிசோதனை மற்றும் நீரிழப்பு பிரச்னையை சரிசெய்ய அனுமதிக்கிறோம். அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

85 வயதான சரத் பவார் இம்மாதத்தில் மட்டும் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பிப்ரவரி 9ஆம் தேதியன்று மார்பு வலி மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; பிப்ரவரி 14 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது, மருத்துவர்கள், அவர் போதுமான ஓய்வு எடுத்து, பின்னர் அரசியல் மற்றும் பொதுச் செயல்பாடுகளை மெதுவாகத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மேற்கு வங்காள சாணக்கியர்.. மம்தா பானர்ஜி நெருங்கிய நண்பர்.. முகுல் ராய் மரணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com