புதுச்சேரி, அக்.3, 2025: “நாட்டின் அமைதியை கெடுக்கும் ஓர் இயக்கம்” ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கத்தை என கடுமையாக விமர்சித்துள்ளார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான நாராயண சாமி.
நாராயண சாமி பேட்டி
இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்ஸின் 100வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றி இருவருக்கும் என்ன தெரியும்?” எனக் கேள்வியெழுப்பினார்.
ஆங்கிலேயர்களை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ்
தொடர்ந்து, “சுதந்திரப் போராட்டத்தின் போது, மகாத்மா காந்தி மற்றும் நேரு தலைமையிலான போராட்டங்களின் போது, ஆர்.எஸ்.எஸ் தான் ஆங்கிலேயர்களை ஆதரித்தது” என்றார்.
ஆர்.எஸ்.எஸ் மீது விமர்சனம்
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் குறித்து விமர்சித்து பேசிய நாராயண சாமி, “ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஒரு இயக்கம்; அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லை” என்றார்.
தொடர்ந்து, “முதல்வர் மற்றும் முதன்மை அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்னணியை அறியாமல் அவர்களை வாழ்த்துகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அஸ்ஸாமை உலுக்கும் பாடகர் ஜூபின் கார்க் மரணம்.. நீதி கோரி காங்கிரஸ் பேரணி
Viksit Bharat G-RAM-G Act: மத்திய அரசின் விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தின் மூலமாக, 125 நாள்கள் வேலை கிராமப்புற மக்களுக்கு உறுதியாக வழங்கப்படும்…
Amit Shah : “இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்….
Droupadi Murmu Greetings on Pongal: பஞ்சாபியர்களின் அறுவடை திருநாளான லோஹ்ரி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு….
Nipah Virus: மேற்கு வங்கத்தில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது….
Narendra Modi: பொங்கல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது….
Delhi Cold wave: டெல்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் பனிக் காற்று வீசி வருகிறது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்