Supreme Court Of India: ஒருவர் மதம் மாறினால் எஸ்.சி (பட்டியல் சமூக சாதி) அந்தத்தை இழக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Supreme Court Of India: ஒருவர் மதம் மாறினால் எஸ்.சி (பட்டியல் சமூக சாதி) அந்தத்தை இழக்கக்கூடும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Published on: March 24, 2026 at 2:59 pm
புதுடெல்லி மார்ச் 24, 2026; ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் இஸ்லாமியராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ மதம் மாறினால் அவர் பட்டியல் இன அந்தஸ்தை இழப்பார் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. அதாவது மதம் மாறினால் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இனத்துக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் அரசு உள்ளிட்ட வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாது.
சுருங்கச் சொல்வதென்றால், அந்த நபர் SC பிரிவுக்கான இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, கல்வி சலுகைகள் போன்ற அரசியல் மற்றும் சமூக நலன்களை பெற முடியாது.
இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 24 2026) வழங்கியது. அந்த தீர்ப்பில், “1950 அரசியலமைப்பு ஆணை (Constitution Order) படி, SC எனப்படும் பட்டியல் இன அந்தஸ்து ஹிந்து, புத்த, சீக்கிய மதத்தினருக்கே வழங்கப்பட்டுள்ளது” என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின்படி பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், கிறிஸ்தவம், இஸ்லாம் அல்லது வேறு மதத்திற்கு மாறினால், SC அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படும்.
மேலும் உச்ச நீதிமன்றம், மதம் மாறி மீண்டும் ஹிந்து மதத்தை ஏற்றுக்கொள்வது, இடஒதுக்கீடு பெறுவதற்காக மட்டுமே என்றால் அது அரசியலமைப்புக்கு எதிரான மோசடி” என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளது.
முன்னர் இதே தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மற்றும் ஆந்திரா ஹை கோர்ட் உறுதிப்படுத்தி இருந்தது; கன்னியாகுமரியைச் சேர்ந்த பட்டியலின பெண் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நிலையில் அவர் அனுபவித்து வந்த பட்டியலின மக்களுக்கான பதவி பறிக்கப்பட்டது என்பதை நினைவு கூறத்தக்கது.
இதையும் படிங்க; மேற்காசிய மோதல்.. பெரும் சவால்களை சந்திக்கும் இந்தியா.. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com