Gold mine: ஒடிசாவில் பெரும் தங்க சுரங்க வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தங்கச் சுரங்க வயல்கள் எங்குள்ள?
Gold mine: ஒடிசாவில் பெரும் தங்க சுரங்க வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தங்கச் சுரங்க வயல்கள் எங்குள்ள?
Published on: August 18, 2025 at 11:15 pm
புவனேஸ்வர், ஆக.18 2025: இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த இடம், தங்கச் சுரங்கத்துக்கான ஒரு புதிய இடமாக மாறியுள்ளது.
தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகள் எவை?
இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் ஒடிசாவின் தியோகர் (அடாசா-ராம்பள்ளி), சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் இருப்பதாக அடையாளம் கண்டுள்ளது.
அந்த வகையில், இங்குதான் தங்க இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மயூர்பஞ்ச், மல்காங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் போன்ற இடங்களிலும் தங்கச் சுரங்கம் உள்ளதா? என தேடுதல் பணிகள் நடைபெறுகின்றன.
இதற்கிடையில் புதிய தங்கக் கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்கும் திட்டங்களை ஒடிசா அரசு விரைவுப்படுத்தி வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்கம் இறக்குமதி
இந்தியாவில் உள்நாட்டு தங்க உற்பத்தி மிகக் குறைவாக உள்ளது. இதனால், முந்தைய ஆண்டில் இந்தியா சுமார் 700–800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.
இந்த நிலையில், ஒடிசாவில் தங்க இருப்பு உண்மையில் நல்ல அளவில் காணப்பட்டால், அது இந்தியப் பொருளாதாரத்திற்கும், குறிப்பாக ஒடிசா மாநிலத்திற்கும் ஒரு பெரிய மாற்றமாக அமையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேரளத்தில் பெரும் சர்ச்சை.. நேதாஜி குறித்த பாடப் புத்தகத்தில், ‘வரலாற்று பிழை’!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com