Bihar assembly polls 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மிகப்பெரிய இடஒதுக்கீடு வாக்குறுதியை வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளார்.
Bihar assembly polls 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மிகப்பெரிய இடஒதுக்கீடு வாக்குறுதியை வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளார்.
Published on: September 24, 2025 at 9:51 pm
பாட்னா, செப்.24, 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தல் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) பீகாரில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் இடஒதுக்கீடு தொடர்பாக மிகப்பெரிய வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
बिहार में बहुजनों को उनका पूरा हक़ और अधिकार दिलाने के लिए आज हमने ऐतिहासिक ‘अतिपिछड़ा न्याय संकल्प पत्र’ जारी किया है। इसमें 10 ठोस संकल्प हैं –
— Rahul Gandhi (@RahulGandhi) September 24, 2025
1. आरक्षण की 50% सीमा बढ़ाने के लिए पास कानून को 9वीं अनुसूची में शामिल करने के लिए भेजेंगे।
2. पंचायत-नगर निकाय में आरक्षण 20% से… pic.twitter.com/ViW337tAAT
அதன்படி, “பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு (EBC)இடஒதுக்கீடு தற்போதைய 20%-லிருந்து 30%-ஆக உயர்த்தப்படும்” என்றார்.
மேலும், “50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவதாகவும், மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஒதுக்கீட்டை நோக்கி நகர்வதாகவும்” அவர் கூறினார்.
அதாவது, “மாநில சட்டமன்றத்தால் ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அரசியலமைப்பின் இந்த அட்டவணையில் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்ட மத்திய மற்றும் மாநில சட்டங்களின் பட்டியல் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க : காதி சேலை அணிந்த கங்கனா ரணாவத்.. ‘இது இந்த மண்ணின்…’
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com